எமது புகலிடங்கள்

லீடர் பிளேஸ் குடும்பப் புகலிடம் - ( தங்குதற் காலம் 6 வாரங்கள் )

Family Shelter

குடும்பங்களுக்கான அவசரநிலைப் புகலிடம் பின்வருவனவற்றை வழங்கும் :

l கட்டுப்படியான வீட்டு வசதியைக் பெறுவதற்கும் நடத்துவதற்கும் ஆதரவு

l உணவு மற்றும் தங்குமிடம்

l பிள்ளைகளைப் பாடசாலையிற் சேர்ப்பதில் உதவி

l ஆதரவான ஆலோசனைகள்

l மதிப்பீடு

l பொருத்தமான பரிகார நிகழ்ச்சிகளையும் சமுதாய சேவைகளையும் பரிந்துரைத்தல்

போர்ட்டர் பிளேஸ் ஆண்கள் புகலிடம் - ( தங்குதற் காலம் 6 வாரங்கள் )

வீடற்ற ஆண்களுக்கான அவசரநிலைப் புகலிடம் பின்வருவனவற்றை வழங்கும் :

l கட்டுப்படியான வீட்டு வசதியைப் பெறுவதற்கும் நடத்துவதற்கும் ஆதரவு

l உணவும் தங்குமிடமும்

l ஆதரவான தனிப்பட்ட ஆலோசனைகள்

l மதிப்பீடு

l பொருத்தமான பரிகார நிகழ்ச்சிகளையும் சமுதாய சேவைகளையும் பரிந்துரைத்தல்

யோர்க் பிராந்திய இளைஞர் புகலிடம் - ( தங்குதற் காலம் 4 மாதங்கள் )

16 முதல் 26 வயது வரையான ஆண்களுக்கான அவசரநிலைப் புகலிடம் பின்வருவனவற்றை வழங்கும் :

l கட்டுப்படியான வீட்டு வசதியைப் பெறுவதற்கும் நடத்துவதற்கும் ஆதரவு

l உணவும் தங்குமிடமும்

l ஆதரவான ஆலோசனைகள்

l பொருத்தமான சமுதாய சேவைகளுக்கான பரிந்துரைகள்

l வேலை தேடுவதற்கான உதவி

l வாழ்க்கைத் திறன் கற்கை வாய்ப்புகள்

எமது புகலிடங்கள் மூன்றில் ஒவ்வொன்றிலும் சமுதாய வீட்டு வசதி ஆதரவு நிகழ்ச்சியின் பகுதியாக, கட்டுப்படியான வீட்டு வசதியைக் கண்டுகொள்வதற்கும், பெறுவதற்கும், வைத்திருப்பதற்கும் குடியிருப்போருடன் நாம் இணைந்து செயற்படுகிறோம். எமது சேவைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும் :

l அடையாள அட்டை பெறுவதற்கான உதவி

l நிலக்கிழார்களுடன் தொடர்புபடுத்தலும் மத்தியஸ்தம் வகித்தலும்

l வரவு-செலவு / நிதி திட்டமிடல்

l சேவைப் பரிந்துரை

l வீட்டு வசதி தேடல் உதவி