முகப்பு

யோர்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள புளூ டோர் ஷெல்டர்ஸ் அமைப்பு வீடற்றோருக்கும் வீடிழக்கும் இடரை எதர்நோக்குவோருக்கும் பாதுகாப்பானதும் ஆதரவானதுமான புகலிடங்களையும் சேவைகளையும் வழங்குகிறது. குடும்பங்கள், ஆண்கள் மற்றும் இளைஞர்களுக்காக நாம் கட்டணம் அறவிடாத அவசரநிலைப் புகலிடங்கள் மூன்றை இயக்குகிறோம்.
ஒவ்வொரு புகலிடமும் பின்வருவனவற்றை வழங்கும் :
l நிரந்தர வீட்டு வசிதியைப் பெற்றுக்கொள்வதற்கான உதவி
l உணவும் தங்குமிடமும்
l ஆதரவான ஆலோசனைகள்
l சமூக சேவை அறிவுறுத்தல்கள்
l வாழ்க்கைத் திறன் கற்கை வாய்ப்புகள்
l 24/7 அணுக்கம்
யோர்க் பிராந்தியத்தில் வீடற்றோர்
l குடியிருப்பாளர் 8 பேரில் 1 ஆள் என குறைந்த வருமான மட்டத்துக்குக் கீழே இருந்தனர் (2006 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி )
l 22% வாடகைக் குடியிருப்பாளர் தம் வருமானத்தில் அரைவாசிக்கும் மேலாக வீட்டு வசதிக்காகச் செலவழித்தனர்
l வீட்டு வசதிச் செலவுக் குறைப்புக்காகக் காத்திருக்கும் சராசரி கால அளவு எட்டு ஆண்டுகளுக்கும் கூடுதலாகும்
யோர்க்பிராந்தியம்முழுவதும்சேவைவழங்கப்படுகிறது
