எம்மைப் பற்றி

இலாப நோக்கற்ற அறக்கட்டளை முகவரகமாகப் பதிவு செய்யப்பட்டு (# 13057 1896 RR0001) தன் விருப்பத் தொண்டர்களைக் கொண்ட இயக்குநர் சபையினால் நிருவகிக்கப்படும் புளூ டோர் ஷெல்டர்ஸ் அமைப்பு 1982 முதல் யோர்க் பிராந்தியத்தின் வீடற்ற சமுதாயத்தினருக்கான அவசரநிலைப் புகலிடம் வழங்குவதில் எமது சமுதாயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிராந்தியம் வளர்ந்துள்ளது போன்றே எமது நிறுவனமும் வளர்ந்துள்ளது. தனியாள் ஆண்களுக்கான புகலிடமாகத் தொடங்கிய புளூ டோர் ஷெல்டர்ஸ் தன் சேவைகளைக் குடும்பங்களுக்கும் இளைஞர்களுக்கும் விரிவாக்கியுள்ளது.

எமது குறிக்கோள்
வீடற்ற அல்லது வீடிழக்கும் இடரை எதிர்நோக்கியுள்ள மக்களுக்குப் பாதுகாப்பானதும் ஆதரவானதுமான அவசரநிலைப் புகலிடம் வழங்குதல்

எமது நோக்கம்

அனைவரும் வீட்டு உரிமையைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்

விழுமியங்கள்
மரியாதை

l நாம் மக்களை கண்ணியமாக நடத்துகிறோம்.

l நாம் எப்படிச் செயற்படுகிறோம், பழகுகிறோம் என்பதற்கு நாமே தனிப்பட்ட முறையிற் பொறுப்பாவோம்.

l அறிவுறுத்தப்பட்ட தெரிவுகளை மேற்கொள்வதற்கான எமது வாடிக்கையாளரின் உரிமைகளை நாம் மதிக்கிறோம்.

l எமது வாடிக்கையாளர் தெரிவு செய்துள்ள அல்லது தெரிவு செய்யும் தேர்வுகள் தொடர்பில் நாம் இடையூறாக மாட்டோம்.

பல்வகைமையும் உள்ளடக்கலும்

l எமது வாடிக்கையாளர், பணிக்குழு, தொண்டர்கள், நிதி வழங்குவோர் மற்றும் அன்பளிப்பாளர்களின் பல்வகைமையை நாம் கொண்டுள்ளோம்.

lஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் எமது நிருவாக சபை, பணிக்குழு மற்றும் தொண்டர்கள் எமது சமுதாயத்தின் பல்வகைமையை வெளிப்படுத்துகின்றனர்.

l எமது வேலையின் எல்லா முறைமையிலும் அனைவருக்குமான உள்ளடக்கலை வழங்குவதற்கு நாம் முயல்கிறோம்.

l வீடற்றிருத்தல் மற்றும் / அல்லது அவசரநிலைப் புகலிடம் வேண்டியிருத்தல் கொண்டிருக்கும் சமூக ஏற்பில்லாமையை நாம் புரிந்து கொள்வதுடன் அதனை நீக்குவதற்கு முயல்கிறோம்.

வாடிக்கையாளரை மையப்படுத்தியது

பொறுப்பேற்றல்

l எமது வாடிக்கையாளர்கள், பணிக்குழு, தொண்டர்கள், நிதி வழங்குவோர் மற்றும் நன்கொடையாளர்களிடம் எமது வளங்களின் பொறுப்பான முகாமைத்துவம் தொடர்பில் நாம் வெளிப்படையாகவும் பொறுப்புள்ளோராகவும் இருப்போம்.

l குறிக்கப்பட்ட எமது விழுமியங்களின் சொற்கள் மற்றும் கருத்துக்களைச் சரியாக அடைவதற்கான சேவைகளை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

எமது இயக்குநர் சபை 2010/2011
Kevin Kennedy , தலைவர்
Angela DiCapua , துணைத் தலைவர்
Rich Bishop , பொருளாளர்
Bill Kidd , செயலாளர்
Jean Shields , முன்னாள் தலைவர்
Bernice Ishmael
Janet Williams
Shamsha Kanji
Daniel Lee
Sandra Lozano